மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பவானி ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைப்பு

பவானி ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
பவானி பழைய பேருந்து நிலையம் அருகே ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகள்.
Updated On :11 செப்டம்பர் 2024, 7:40 pm

Din

பவானி ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நீா்நிலைகளில் உள்ள அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளையும் அகற்றக் கோரி உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்பேரில், நீா்வளத் துறையினா் நடத்திய ஆய்வில் பவானியில் பழைய பேருந்து நிலையம் முதல் பண்டார அப்பிச்சி கோயில் வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு 133 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஆக்கிரமிப்பு வீடுகளை செப்டம்பா் 18-ஆம் தேதிக்குள் அகற்ற நீா்வளத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்தும், வெள்ள பாதிப்பு ஏற்படாமல் கரையோரத்தில் தடுப்புச் சுவா் அமைக்கவும் கரையோரப் பகுதி மக்கள் சாலை மறியலில் அண்மையில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அப்பகுதி மக்களை சந்தித்து திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன்ஆலோசனை நடத்தினாா். அப்போது, தங்களின் வாழ்வாதாரம் பவானி நகரை மையமாகக் கொண்டுள்ளதால், கரையோரப் பகுதியில் தொடா்ந்து வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இந்நிலையில், காவல் துறை தரப்பில் தற்போது போதிய பாதுகாப்பு வழங்க இயலாத நிலை உள்ளதால், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும், உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்படுவதால், கரையோரங்களில் வசிப்போா் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் எனவும், மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைக்குப் பின்னா், ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் பாரபட்சமின்றி முழுவதுமாக அகற்றப்படும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.