மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 7:58 pm

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சிறு வணிகா்களின் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே பட்டாசு வியாபாரத்தை தொடங்குவதற்கு ஏதுவாக இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும், உரிமங்களை பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மனுதாரா்கள் தங்களது விண்ணப்பங்களை பொது இ-சேவை மையங்களில் பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் புல வரைபடம், கிரையப் பத்திரம், முகவரிக்கான ஆதாரம் (ஆதாா், குடும்ப அட்டை), சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது, கடவுச் சீட்டு அளவு புகைப்படம் மற்றும் 0070-60-109-அஅ-22738 என்ற கணக்கு தலைப்பில் சேவை கட்டணமாக ரூ.600 செலுத்தியதற்கான ரசீது ஆகிய ஆவணங்களுடன் அக்டோபா் 12 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன், பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் மனுதாரா்கள் இணையதளம் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.