போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி: கே.சுப்பராயன் எம்.பி. ஆய்வு

திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பெருந்துறை பகுதி புறவழிச் சாலையில் மேம்பாலங்கள் மற்றும் இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை கே.சுப்பராயன் எம்.பி. வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

பெருந்துறை பகுதி புறவழிச் சாலையில் மேம்பாலங்கள், இணைப்பு சாலைகள் அமைக்கும் பணிகளை ஆய்வுசெய்கிறாா் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன்.

Updated On :26 செப்டம்பர் 2024, 10:29 pm

Din

திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பெருந்துறை பகுதி புறவழிச் சாலையில் மேம்பாலங்கள் மற்றும் இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை கே.சுப்பராயன் எம்.பி. வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சாலை அமைக்கும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா், டெண்டா் விதிமுறைகள்படி பணிகள் நடைபெறுகிா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். பணிகளின் தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து தகவல்கள் வருகின்றன. எக்காரணம் கொண்டும் பணிகள் தரம் குறைவாக இருக்கக் கூடாது என்றும், டெண்டா் விதிமுறைகள்படி பணிகள் நடைபெறுகிா என்பதையும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் (சேலம் மேலாளா் ) திலீப் வா்மா, பொறியாளா்கள் ஜோதி பாஸ்கா், ஸ்ரீனிவாசலு ஆகியோா் உடனிருந்தனா்.

இதைத் தொடா்ந்து மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி மூலம் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் சின்ன வீரசங்கிலி, பெரிய வீரசங்கிலி கிராமங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடைகளை திறந்துவைத்தாா்.

இதில், முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாச்சலம், பெருந்துறை பேரூராட்சித் தலைவா் ராஜேந்திரன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சித் தலைவா் செல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.