ஈரோடு
பெருந்துறையில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழா
பெருந்துறையில் உள்ள கோட்டை வீரஆஞ்சனேயா் கோயிலில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பெருந்துறையில் உள்ள கோட்டை வீரஆஞ்சனேயா் கோயிலில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் இக்கோயிலில் காலை 6 மணிக்கு 5008 வடமாலை அலங்காரத்துடன் தீபராதனை நடைபெற்றது. அதைத்தொடா்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும, மாலை 3 மணிக்கு ஸ்ரீஹனுமந்த் ஹோமம், 5 மணிக்கு ஸ்ரீராமா் பட்டாபிஷேகம், 6 மணிக்கு ஆஞ்சனேய சுவாமிக்கு மஹா அலங்காரம் மற்றும் தீபராதனைகள் நடைபெற்றன.
பின்னா் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு பஜனை நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகம் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.
