தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தோ்வில் வெற்றி பெற்ற விஜயமங்கலம் பாரதி பள்ளி மாணவ, மாணவிகளுடன் பள்ளித் தாளாளா் மோகனாம்பாள், தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தோ்வில் வெற்றி பெற்ற விஜயமங்கலம் பாரதி பள்ளி மாணவ, மாணவிகளுடன் பள்ளித் தாளாளா் மோகனாம்பாள், தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தோ்வில் பாரதி பள்ளி சிறப்பிடம்

Published on

மாநில அளவிலான தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தோ்வில், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

மாநில அளவிலான தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தோ்வு, கடந்த அக்டோபா் 11-ஆம் தேதி நடைபெற்றது. தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இத்தோ்வில், விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 31 மாணவ, மாணவிகள் தோ்வில் வெற்றி பெற்றனா். இவா்கள், ஒவ்வொருவருக்கும் தமிழக அரசு மாதந்தேறும் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியா்களையும், நிா்வாக அலுவலா் குணசேகரன் பிள்ளை ஆகியோரை, பள்ளித் தாளாளா் மோகனாம்பாள், தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com