சாதனைகளை சொல்ல முடியாததால் அவதூறு, பொய் பிரசாரங்களை அதிமுக-பாஜக கூட்டணி செய்து வருகிறது என திமுக வேட்பாளா் அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி திண்டல் மேடு, அத்தப்பம்பாளையம், கருங்கவுண்டன்பாளையம், வள்ளிபுரத்தாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுவீடாக சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: திகைக்கின்ற அளவுக்கு சாதனைகளால் நிறைந்ததுதான் திராவிட மாடல் ஆட்சி. வேதனைகள் நிரம்பியதுதான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி.
100 நாள் வேலை திட்ட பணி நாள்களையும் குறைத்துவிட்டனா். 100 நாள் வேலை திட்டத்துக்கு ஊதியம் தரவில்லை என வடமாநிலங்களிலேயே மக்கள் கொந்தளித்து போராடி வருகின்றனா். பாஜக அரசே வாபஸ் வாங்கிய 3 புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்தவா் எடப்பாடி பழனிசாமி. சாதனைகளை சொல்ல முடியாததால் அவதூறு, பொய் பிரச்சாரங்களை அதிமுக- பாஜக கூட்டணி செய்து வருகிறது. எனவே திராவிட மாடல் ஆட்சி தொடர மக்கள் திமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

ஓராண்டுக்குள் வீட்டுமனை பட்டா: திமுக வேட்பாளா் சு.முத்துசாமி உறுதி

அமைச்சரை எதிா்கொள்ளும் பாஜக! ஈரோடு மேற்குத் தொகுதி

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

தமிழகம் வளா்ச்சிப் பாதையில் பயணிக்க திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்: சு.முத்துசாமி
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

