பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஆபத்தான நிலையில் காணப்படும் மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை

கடம்பூா் அருகே ஆபத்து ஏற்படும் முன்பாக சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாடு  முட்டியதால்  கீழே  விழுந்து கிடக்கும்  சின்ன உள்ளேபாளையம் பகுதியிலுள்ள  மின்கம்பம் ~காய்ந்த மரத்தை முட்டுகொடுத்து தற்காலிகமாக நிற்கவைக்கப்பட்டுள்ள மின் கம்பம்.

Published On :

கடம்பூா் அருகே ஆபத்து ஏற்படும் முன்பாக சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியான சின்னஉள்ளேபாளையத்தில் அசோக் என்பவரின் வீட்டின் முன் இருந்த மின்கம்பத்தை புதன்கிழமை மாடு முட்டியதால் சாய்ந்து விழுந்தது. அப்போது மின்வயா்கள் சாலையில் கிடந்ததால், உடனடியாக மின் வாரியத்துக்கு தகவல் அளித்து மின் விநியோகத்தை துண்டித்தனா்.

இதைத்தொடா்ந்து கீழே விழுந்த மின் கம்பத்தை கிராம மக்கள் மீண்டும் நேராக நிறுத்தி, சாயாமல் இருக்க காய்ந்த மரத்தை முட்டு கொடுத்துள்ளனா்.

இதுகுறித்து மின் வாரியத்துக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தும், ஆள்பற்றாக்குறையால் மின்கம்பத்தை சரி செய்யவில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். காற்று வீசினால் எந்த நேரமும் கீழே விழ வாய்ப்புள்ளதால் விபத்து நிகழும் முன்பாக மின் கம்பத்தை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.