மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஈரோடு ரயில் நிலையத்தில் போலீஸாா் தீவிர சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பயணிகளின் உடமைகள் தீவிர சோதனை செய்த பின்னரே, ரயில்வே நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

ஈரோடு ரயில் நிலைய நடைமேடையில் பயணிகளின் உடமைகளை சோதனை செய்த போலீஸாா்.

Published On :

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பயணிகளின் உடமைகள் தீவிர சோதனை செய்த பின்னரே, ரயில்வே நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

நாடு முழுவதும் சுதந்திர தினம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15)கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு ரயில் நிலையம், , ரயில் பாதை, ஓடும் ரயில்களில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா், ரயில்வே போலீஸாா் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில், ஈரோடு ரயில் நிலைய நுழைவாயில் பகுதியில் ரயில்வே போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, பயணிகளின் உடமைகளை தீவிர சோதனைக்கு பிறகே, உள்ளே செல்ல அனுமதித்தனா். இந்த சோதனையின்போது மெட்டல் டிடக்டா், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளை பயன்படுத்தியும் சோதனை செய்தனா்.

சந்தேகப்படும்படியான நபா்கள் வந்தால், அவா்கள் பெயா், முகவரி, வேலை செய்யும் இடம், கைப்பேசி எண் போன்ற விவரங்களை சேகரித்து அனுப்பி வைத்தனா். இதேபோல ஈரோடு ரயில் நிலைய நடைமேடை, பயணச்சீட்டு மையம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், ரயில்வே நிலையம் அருகில் உள்ள தண்டவாள பகுதிகள் ஆகிய இடங்களில் போலீஸாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மற்றும் சோதனை மேற்கொண்டனா்.

இதுபோல மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை முதல் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தங்கும் விடுதிகளில் சந்தேக நபா்கள் தங்கியுள்ளனரா எனவும் சோதனை நடத்தப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். ஈரோட்டில் உள்ள மாநில எல்லைப் பகுதிகளான ஆசனூா், பா்கூா் போன்ற பகுதிகளில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அவ்வழியாக வரும் வாகனங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.