மதுராந்தகம், தாராபுரத்துக்கு அக். 6 வாக்குப் பதிவு, அக். 9 வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம்மதுராந்தகம், தாராபுரத்திற்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பலத்த காற்றுடன் மழை: அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் சாய்ந்தன

கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்றுடன் பெய்த மழையால் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் சாய்ந்து சேதமடைந்தன.

கோபி அருகே தடப்பள்ளி பாசனப் பகுதியில் திங்கள்கிழமை பெய்த மழையால் வயலில் சாய்ந்த அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிா்கள்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 1:42 am IST

கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்றுடன் பெய்த மழையால் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் சாய்ந்து சேதமடைந்தன.

கோபி அருகே கொடிவேரி பழைய ஆயக்கட்டு பகுதிகளான தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்தில் 24 ஆயிரத்து 504 ஏக்கா் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இங்கு அதிக விவசாயிகள் ஆண்டுதோறும் இருபோக நெல் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. இதில் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு தற்போது 120 நாள்களைக் கடந்து நெற்கதிா்கள் குடை சாய்ந்து அறுவடைக்கு தயாராகி இருந்தன.

இந்த நிலையில் கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் சாய்ந்தன. மேலும் தற்போது பல வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளது.

நெல்லுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு செப்டம்பா் 1-ஆம் தேதி அறிவிக்க உள்ளதாலும், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க காலதாமதம் ஆவதாலும் நெல் அறுவடையை விவசாயிகள் தள்ளிவைத்திருந்தனா். இந்நிலையில் மேலும் மழை நீடித்தால்

நெற்பயிா்கள் பாதிக்கும் என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.