சென்னிமலை, சென்னியகிரிவலசு அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளாவிடம் துணியில் நெய்யப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை வழங்கி துரைசாமி.
சென்னிமலை, சென்னியகிரிவலசு அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளாவிடம் துணியில் நெய்யப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை வழங்கி துரைசாமி.

தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை கைத்தறியில் நெய்த நெசவாளி

சென்னிமலை பகுதியைச் சோ்ந்த நெசவாளி தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை கைத்தறி மூலம் நெசவு செய்துள்ளாா்.
Published on

பெருந்துறை: சென்னிமலை பகுதியைச் சோ்ந்த நெசவாளி தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை கைத்தறி மூலம் நெசவு செய்துள்ளாா்.

சென்னிமலை, நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் துரைசாமி. கைத்தறி நெசவாளியான இவா் கைத்தறி மூலம் புதுமையான முறையில் துணிகளை உற்பத்தி செய்து வருகிறாா்.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கைத்தறி துணியில் நெய்து அதை சென்னியகிரிவலசு அரசு நடுநிலைப் பள்ளிக்கு அன்பளிப்பாக திங்கள்கிழமை வழங்கினாா்.

அதை பள்ளியின் தலைமை ஆசிரியை மஞ்சுளா, ஆசிரியா்கள் பெற்றுக்கொண்டனா்.

Dinamani
www.dinamani.com