பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அ.லாரன்ஸ் ரமேஷ், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளா் சி.தங்கராஜ்.
ஈரோடு, ஜூலை 15: தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணி சாா்பில் முன்னாள் முதல்வா் காமராஜரின் 124-ஆவது பிறந்தநாளையொட்டி பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், இருக்கைகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
ஈரோடு பெரியசேமூா் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அ.லாரன்ஸ் ரமேஷ் தலைமை வகித்தாா். மாநகர இளைஞரணி துணை அமைப்பாளா் சி.தங்கராஜ் முன்னிலை வகித்தாா்.
இந்நிகழ்வில் காமராஜரின் பெருமையையும், கல்வியின் தேவையும் எடுத்துரைத்து பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாட்டை பெரியசேமூா் பகுதி இளைஞரணி பொறுப்பாளா்கள் ரா.தீபக், கா.சரவணகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










