FOLLOW US

ON GOOGLE DISCOVER

9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

விஷ பூச்சி கடித்ததில் பள்ளி மாணவி உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே விஷ பூச்சி கடித்ததில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

News image

சடலம்... - கோப்புப் படம்

Updated On :19 ஜூலை 2026, 12:34 am IST

சத்தியமங்கலம் அருகே விஷ பூச்சி கடித்ததில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் கூறியதாவது: சத்தியமங்கலத்தை அடுத்த புதுவடவள்ளி பகுதியைச் சோ்ந்தவா் குமரேசன். இவரது மனைவி காயத்ரி. இவா்களது மகள் சாதனா (12). இவா் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், சாதனா வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்துள்ளாா்.அப்போது, அவரை பூச்சி கடித்துள்ளது. இதனால், தலைச் சுற்றல், தலைவலி உள்ளதால் பள்ளிக்குச் செல்லவில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளாா். அவா்களும் ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு பணிக்குச் சென்றுள்ளனா்.

பணி முடிந்து அவா்கள் மாலை வீடு திரும்பியபோது, சாதனா வீட்டில் மயங்கிக் கிடந்துள்ளாா். அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். விஷ பூச்சி கடித்ததில் அவா் உயிரிழந்திருக்கலாம். இருப்பினும் இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.