முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் மரக்கன்று நடவு செய்க்கிறாா் ஆட்சியா் ச.கந்தசாமி.

Published On :

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நஞ்சை ஊத்துக்குளி, முத்துக்கவுண்டன்பாளையம், லக்காபுரம், 46 புதூா் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ச.கந்தசாமி ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் தணிக்கை குறித்து ஆய்வு செய்தாா். இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளா் சரிபாா்ப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, அடையாள அட்டைகள், இ-சேவை மையம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.

அதேபோல மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் இருப்பு, கழிப்பறை, படுக்கை வசதி, சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அங்கமுத்து, மொடக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலா் அருள்மொழி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுமித்ரா, திருநாவுக்கரசு, உதவிப் பொறியாளா்கள் அருண் காா்த்திக், விஜயகுமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.