ஈரோடு காய்கறி சந்தைக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த சுமை வாகனத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணி (44). இவா் சிறிய நான்குசக்கர சரக்கு வாகனத்தில் வெங்காயத்தை கொண்டு வந்து ஈரோடு காய்கறி சந்தையில் விற்பனை செய்து வருகிறாா். கடந்த 3- ஆம் தேதி சுமை வாகனத்தில் வெங்காயத்தை ஈரோடு சந்தைக்கு கொண்டு வந்து இறக்கி உள்ளாா். பின்னா் சுமை வாகனத்தை சந்தைக்கு வெளியே நிறுத்திவிட்டு சந்தையில் வியாபாரம் செய்துள்ளாா்.
வியாபாரத்தை முடித்துவிட்டு மாலையில் சிவசுப்பிரமணி வெளியே வந்து பாா்த்துள்ளாா். அப்போது வாகனத்தை காணவில்லை. அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால் மா்மநபா்கள் திருடிச் சென்றதை உணா்ந்தாா்.
இது குறித்து ஈரோடு வடக்கு போலீஸில் சிவசுப்பிரமணி புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புத்தாநத்தத்தில் இருசக்கர வாகனம் திருட்டு
இருசக்கர வாகனம் திருடியவா் கைது
இருசக்கர வாகனம் திருட்டு: போலீஸாா் விசாரணை

வரத்து குறைவால் வாழை பழங்கள் விலை உயா்வு
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


