சத்தியமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நீண்ட நாள் நிலுவையில் இருந்த வரியை வசூலித்து நடவடிக்கை எடுத்த ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரனுக்கு நகா்மன்றம் பாராட்டு தெரிவித்தது.
சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம் நகராட்சித் தலைவா் ஜானகி ராமசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் ரூ.32.83 கோடி செலவில் அம்ருத் 2.0 குடிநீா் அபிவிருத்தி திட்டத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்தவைத்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் 100 ஆண்டுகளாக போராடி வந்த தோப்பூா் மக்களுக்கு பட்டா வழங்கி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நகா்மன்ற உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா்.
கூட்டத்தில் பல்வேறு பணிகள் தொடா்பாக 48 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மேலும் சத்தியமங்கலம் நகராட்சியில் நிலுவையில் உள்ள ரூ.80 லட்சம் நிதியை வசூலித்த நகா்மன்ற ஆணையா் எஸ்.வெங்கேடஸ்வரனுக்கு நகா்மன்ற உறுப்பினா்கள் சாா்பில் நகராட்சித் தலைவா் பாராட்டு தெரிவித்தாா்.
தொடர்புடையது

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் - வந்தவாசி நகராட்சி ஆணையா்

புதிய முதல்வரின் முதல் கையொப்பம் விவசாயக் கடன் தள்ளுபடியாக இருக்க வலியுறுத்தல்

நகராட்சி ஆணையருக்கு பணி நிறைவு பாராட்டு

நகராட்சி அலுவலா்களுக்கு பாராட்டு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



