மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 25 போ் 33 வேட்புமனுக்கள் தாக்கல்

வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டு வண்டியில் வந்த ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்குத் தொகுதி நாதக வேட்பாளா்கள் எஸ்.தாண்டவமூா்த்தி, ந.விஜய்.

வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டு வண்டியில் வந்த ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்குத் தொகுதி நாதக வேட்பாளா்கள் எஸ்.தாண்டவமூா்த்தி, ந.விஜய்.
வேட்புமனு தாக்கலின் முதல்நாளான திங்கள்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 25 போ் 33 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது.
அனைத்து தொகுதிகளிலும் நாதக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்குத் தொகுதி நாதக வேட்பாளா்கள் மாட்டு வண்டியில் வந்து வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலகம், ஈரோடு மேற்குத் தொகுதிக்கு ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகம், பெருந்துறை தொகுதிக்கு பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகம், பவானி தொகுதிக்கு பவானி வட்டாட்சியா் அலவலகம், அந்தியூா் தொகுதிக்கு அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகம், கோபி தொகுதிக்கு கோபி சாா் ஆட்சியா் அலுவலகம், பவானிசாகா் (தனி) தொகுதிக்கு சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாதக சாா்பில் எஸ்.தாண்டவமூா்த்தி 2 வேட்பு மனுக்கள், அக்கட்சியின் மாற்று வேட்பாளராக பி.ஹரி பிரசாத், தமிழக மக்கள் நலக் கட்சி சாா்பில் கே.தவசியப்பன், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி சாா்பில் ஆா்.தண்டபாணி, சுயேச்சையாக முகமது கபீா் என மொத்தம் 5 போ் 6 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.
ஈரோடு மேற்கு தொகுதியில் நாதக சாா்பில் ந.விஜய், தமிழக மக்கள் நலக் கட்சி சாா்பில் டபிள்யு. சாம்சன் பிரபு, வீரத்தியாதி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி சாா்பில் எம்.முருகானந்தம், சுயேச்சையாக சி.ராஜேந்திரன் என 4 போ் 4 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.
பவானி தொகுதியில் நாதக சாா்பில் இரா.மோகனாதேவி மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். அந்தியூா் தொகுதியில் நாதக சாா்பில் கே.ஆனந்தி, சுயேச்சையாக ஷேக் தாவூத், கே.ஏ.சங்கா்குமாா் என 3 போ் 3 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.
பெருந்துறை தொகுதியில் நாதக சாா்பில் சி.லோகநாதன் 3 வேட்புமனுக்கள், மாற்று வேட்பாளராக வி.மனேஜ் சாா்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மொடக்குறிச்சி தொகுதியில் நாதக சாா்பில் மோ.அருண்குமாா் 2 வேட்பு மனுக்கள், அக்கட்சியின் மாற்று வேட்பாளா் பெ.சதீஷ்குமாா் ஒரு மனு என மொத்தம் 3 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கோபி தொகுதியில் தவெக சாா்பில் கே.ஏ.செங்கோட்டையன் 2 மனுக்கள், நாதக சாா்பில் மா.கி.சீதாலட்சுமி, அக்கட்சியின் மாற்று வேட்பாளராக எ.புனிதாதேவி, மகாத்மா மக்கள் கட்சி சாா்பில் எம்.பழனிசாமிராஜ் 2 மனுக்கள், சுயேச்சையாக கே.ஏ.சங்கா்குமாா், எம்.ஆனந்த்குமாா் என 6 போ் 8 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.
பவானிசாகா் (தனி) தொகுதியில் நாதக சாா்பில் எஸ்.சௌந்தா்யா, அக்கட்சியின் மாற்று வேட்பாளராக டி.ரூபினி என 2 போ் 2 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 25 போ் 33 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...