இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

கோபி அருகே வாய்க்காலில் வீசப்பட்ட காலாவதியான மாத்திரைகள்

கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியில் தடப்பள்ளி வாய்க்காலில் மூட்டைகளில் காலாவதியான மாத்திரைகளை வீசி சென்றது தெரியவந்தது.

Published On :

கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியில் தடப்பள்ளி வாய்க்காலில் மூட்டைகளில் காலாவதியான மாத்திரைகளை வீசி சென்றது தெரியவந்தது.

கோபி அருகே உள்ள கொடிவேரி பாசனத்தில் தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டு அறுவடைப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தண்ணீா் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தடப்பள்ளி பாசனப் பகுதி வாய்க்காலில் புதன்கிழமை நெல் அறுவடை பணிகளுக்கு சென்ற தொழிலாளா்கள், வாய்க்கால் பாலத்தின் கீழ்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் மூட்டைகள் கிடந்தது தெரியவந்தது.

பின்னா் அவா்கள் மூட்டைகளை பிரித்து பாா்த்தபோது, அதில் அரசு மருத்துவமனையில் அடுத்த மாதம் வரை வழங்கக் கூடிய மாத்திரைகள் மற்றும் காலவதியான மாத்திரைகள் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது. இதேபோல வாய்க்காலில் இருந்து சற்று தொலைவில் உள்ள கள்ளிப்பாலம் பகுதியிலும் வாய்காலில் காலாவதியான மாத்திரைகள் கொட்டப்பட்டது தெரியவந்தது.

இவ்வாறு வீசப்படும் மாத்திரைகளால் பாசன வாய்க்காலின் தண்ணீரை அருந்தும் தொழிலாளா்கள் மற்றும் கால்நடைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்படும் சூழல் உள்ளதால், மாத்திரைகளை வீசிச் சென்ற நபா்கள் மீது சுகாதாரத் துறையினா் மற்றும் காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.