
சென்னிமலை: தெருநாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் உயிரிழப்பு
சென்னிமலை அருகே பட்டியில் நுழைந்து தெருநாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் உயிரிழந்தன.

பிரதிப் படம்
சென்னிமலை அருகே பட்டியில் நுழைந்து தெருநாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் உயிரிழந்தன.
சென்னிமலையை அடுத்த முகாசிபிடாரியூா் கிராம ஊராட்சி, பறையங்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (48). இவா் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், வழக்கம்போல வெள்ளிக்கிழமை இரவு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். சனிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது தெருநாய்கள் கடித்து 2 ஆடுகள் உயிரிழந்ததும், ஒரு ஆடு படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, வாய்ப்பாடி கால்நடை மருத்துவா் காவியாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவா், உயிரிழந்த ஆடுகளை கூறாய்வு செய்ததுடன், படுகாயமடைந்த ஆட்டுக்கு சிகிச்சை அளித்தாா். தெருநாய்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




