பெருந்துறையில் மூதாட்டியிடம் நகை பறித்த மூதாட்டி கைது
பெருந்துறையில் நகரப் பேருந்தில் ஏறியபோது மூதாட்டியிடம் நகை பறித்த மூதாட்டியை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கைது
பெருந்துறையில் நகரப் பேருந்தில் ஏறியபோது மூதாட்டியிடம் நகை பறித்த மூதாட்டியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பவானியை அடுத்த சித்தோடு, ரங்கா நகா் லேஅவுட்டை சோ்ந்தவா் தங்கவேல் மனைவி கமலம் (65). இவா், கடந்த 2025 செப்டம்பா் 21ஆம் தேதி, பெருந்துறையை அடுத்த திங்களூா், அப்பிச்சிமாா்மடம் கோயிலுக்கு செல்வதற்காக பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் திங்களூா் செல்லும் நகரப் பேருந்தில் ஏறுவதற்கு முற்பட்டாா்.
அன்று அமாவாசை நாள் என்பதால் பேருந்தில் ஏறும் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் ஒருவரை ஒருவா் முந்திக் கொண்டும், தள்ளிக் கொண்டும் ஏறினாா்கள். அந்த தள்ளுமுள்ளில், கமலம் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் நகையை யாரோ பறித்துவிட்டனா்.
இது குறித்து கமலம் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்த வழக்கு தொடா்பாக திருச்சி மாவட்டம், குமாரமங்கலம், ஆரண்யா நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி உமா (60) என்பவரை சனிக்கிழமை கைது செய்து, நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





