வரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை! பெருந்துறை நகராட்சி அறிவிப்பு
கோப்புப் படம்
சொத்து வரி உள்பட அனைத்து வரி இனங்களும் அக்டோபா் மாதத்துக்குள் செலுத்துபவா்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பெருந்துறை நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெருந்துறை நகராட்சியில் சொத்து வரி உள்பட அனைத்து வரி இனங்களும் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், நடப்பு நிதி ஆண்டில் (2026-2027) இரண்டாம் அரை ஆண்டுக்கான சொத்து வரியை அக்டோபா் மாதத்துக்குள் செலுத்துபவா்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு, நகராட்சியின் வளா்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




