பந்தலூரில் லஞ்ச ஒழிப்பு வார நிகழ்ச்சிகள்

பந்தலூரில் லஞ்ச ஒழிப்பு வார நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.
Updated on
1 min read

பந்தலூரில் லஞ்ச ஒழிப்பு வார நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.
லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பந்தலூர், புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்குப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் சிறப்பிடம்பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் செலின் தலைமை வகித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் காளிமுத்து, பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம், காந்தி சேவை மையத் தலைவர் நெளஷாத், தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளித் தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com