விலைச் சரிவால் விவசாயிகள் கவலை:குப்பையில் கொட்டப்படும் பீன்ஸ்
பீன்ஸ் விலைச் சரிவால் விவசாயிகள் அதனை குப்பையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.


பீன்ஸ் விலைச் சரிவால் விவசாயிகள் அதனை குப்பையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைத் தோட்டக் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
மஞ்சூர், குந்தா, காத்தாடிமட்டம், இத்தலார், எமரால்டு, காந்தி கண்டி, தங்காடு, எடக்காடு, பிக்கட்டி, தூதூர்மட்டம், பெங்கால்மட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பீன்ஸ், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், பூண்டு, மேராக்காய், பட்டாணி உள்ளிட்ட பல்வேறு மலைத் தோட்டக் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தற்போது பீன்ஸ் பயிரை மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் உள்ள மொத்த விற்பனையாளர்கள் விவசாயிகளிடம் ஒரு கிலோவுக்கு ரூ. 15 முதல் ரூ. 25 வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.
இதனால் பீன்ஸ் பயிரிடச் செய்த இடுபொருள் செலவுகூட கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே அறுவடை செய்த பீன்ஸை அவர்கள் மார்க்கெட்டுக்குக் கொண்டு செல்லாமல் குப்பையில் கொட்டுகின்றனர்.
வெளிச் சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 70 முதல் ரூ. 80 வரை விற்பனையாகிறது. விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு காய்களை மொத்த விற்பனையாளர்கள் வாங்குவதால், விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பீன்ஸ் பயிரை குப்பையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...