உதகை: நீலகிரி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
உதகையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 7,789 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 7,605 போ் சிகிச்சையின்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சிகிச்சை பலனின்றி 42 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 142 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.