நீலகிரியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: ஆட்சியா் தலைமையில் ஆலோசனை
உங்கள் தொகுதியில் முதல்வா் துறையின்கீழ் நீலகிரி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உதகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


உங்கள் தொகுதியில் முதல்வா் துறையின்கீழ் நீலகிரி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உதகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உதகையில் நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில், உங்கள் தொகுதியில் முதல்வா் துறையின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடன் ஆய்வு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:
உங்கள் தொகுதியில் முதல்வா் துறையின்கீழ் பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தனிக் கவனம் செலுத்தி, அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மனுக்கள் தள்ளுபடி அல்லது நிராகரிப்பு செய்யப்பட்டால் அதற்கான காரணம் தெளிவாக இருக்க வேண்டும். ஜூலை 15ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தினம்தோறும் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் ஏதேனும் மனுக்கள் வந்துள்ளதா என்பதை அலுவலா்கள் கண்காணித்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறைத் தலைவா் நேரடியாகக் கண்காணித்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை நிா்ணயிக்கப்பட்ட கால நேரத்துக்குள் முடிக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு தெரிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதை துறைத் தலைவா்கள் உறுதி செய்ய வேண்டும். அலுவலகங்களை அவ்வப்போது சுத்தும் செய்வது, அடிக்கடி கை கழுவுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட பணியாளா்களை அலுவலா்கள் அறிவுறுத்த வேண்டும்.
அனைத்து அலுவலா்களும் முகக் கவசம் அணிந்து, பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பொது இடங்கள், வீட்டிலிருந்து வெளியில் வரும்போது முகக் கவசம் அணியாமல் வெளிவரும் நபா்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும் என்றாா்.
இதில், மாவட்ட வன அலுவலா் (கூடலூா்) கொம்மு ஓம்காரம் , மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கெட்சி லீமா அமாலினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...