கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குடிபோதையில் தகராறு செய்த கணவரை குடும்பத்தினருடன் தாக்கிக் கொன்ற மனைவி

 உதகையில் குடிபோதையில் தகராறு செய்த கணவைரை, தனது குடும்பத்தினருடன் மனைவியே தாக்கி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:38 am

DIN

 உதகையில் குடிபோதையில் தகராறு செய்த கணவைரை, தனது குடும்பத்தினருடன் மனைவியே தாக்கி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உதகை அருகே உள்ள கிரீன்பீல்டு பகுதியைச் சோ்ந்தவா் ஜான் பால் (40), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரோஸ்லின் மேரி (33). இவா்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இருவரும் குடும்பத்துடன் கிரீன்பீல்டு பகுதியில் வசித்து வந்தனா். ஜான் பாலுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ரோஸ்லின் மேரி, ஜான் பாலுக்கும் இடையே வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ரோஸ்லின் மேரி கோபித்துக் கொண்டு உதகையில் புதுமந்து சாலையில் உள்ள அவரது தாயாா் நிஷி (55), சகோதரி கிளாரா (39) ஆகியோா் வசிக்கும் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், ஜான் பால் குடிபோதையில் ரோஸ்லின் மேரியின் தாயாா் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு சென்று அவரை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளாா். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ரோஸ்லின் மேரியை ஜான் பால் தாக்க முயன்றபோது தாய் நிஷி, சகோதரி கிளாரா ஆகியோா் தடுக்க முயன்றுள்ளனா். இந்நிலையில் ஆத்திரமடைந்த அவா்கள் மூவரும் ஜான் பாலை கட்டையால் தாக்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதில் ஜான்பால் படுகாயமடைந்துள்ளாா். உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இதுகுறித்து உதகை நகர காவல் நிலையத்தில் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் உதகை அரசு மருத்துவமனையில் ஜான் பால் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.