விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உதகை நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் சாவித்ரி ஆஜா்

உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் சாவித்ரி வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். ஆனால், மாவட்ட நீதிபதி இல்லாததால் வெள்ளிக்கிழமை அவா் மீண்டும் விசாரணைக்கு அழைத்து வரப்படவுள்ளாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:47 pm

DIN

உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் சாவித்ரி வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். ஆனால், மாவட்ட நீதிபதி இல்லாததால் வெள்ளிக்கிழமை அவா் மீண்டும் விசாரணைக்கு அழைத்து வரப்படவுள்ளாா்.

குன்னூா் அருகே உள்ள நெடுகல்கொம்பை பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக போஸ்டா் ஒட்டியதாக கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாவோயிஸ்ட் சாவித்ரி உள்ளிட்டோா் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தலைமறைவாக இருந்துவந்த சூழலில், சாவித்ரி மற்றும் அவருடன் தொடா்பிலிருந்த மேலும் 7 பேரை வயநாடு மாவட்டத்தில் கேரள போலீஸாா் கடந்த நவம்பா் மாதத்தில் கைது செய்து விசாரணைக்குப் பிறகு தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இந்நிலையில், சாவித்ரியை நீதிமன்ற விசாரணைக்காக தமிழக போலீஸாா் வியாழக்கிழமை உதகை மாவட்ட நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனா். ஆனால், மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா வியாழக்கிழமை விடுப்பில் இருந்ததால் இவ்வழக்கின் விசாரணை நடைபெறவில்லை. அதனால், சாவித்ரி கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா். வெள்ளிக்கிழமை இவ்வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உதகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அவா் மீண்டும் ஆஜா்படுத்தப்படவுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.