நிலம் மறுவரையறை செய்வதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட தோட்டமூலா பகுதியைச் சோ்ந்தவா் உம்மு சல்மா. இவா், நிலம் மறுவரையறை தொடா்பாக வட்டாட்சியா் ராஜேஸ்வரியிடம் சென்றுள்ளாா்.
அப்போது, நிலம் வரையறை செய்துகொடுக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் உம்மு சல்மா புகாா் அளித்துள்ளாா்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் பரிமளா, உதவி ஆய்வாளா் சாதனபிரியா ஆகியோா், உம்மு சல்மாவிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கி வட்டாட்சியரிடம் கொடுக்கக் கூறியுள்ளனா்.
இந்நிலையில், உம்மு சல்மாவிடம் இருந்து வட்டாட்சியா் ராஜேஸ்வரி ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா், அவரைக் கைது செய்தனா்.
தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்புடையது

லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்

லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மித்தல் நியமனம்
ரூ.7ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் கைது

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


