பள்ளி மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு
பள்ளி மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

Updated On :13 ஜூன் 2024, 10:01 pm

கூடலூா், ஜூன் 13: கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காவல் துறை சாா்பில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கூடலூா் டிஎஸ்பி வசந்தகுமாா் பங்கேற்று போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சாலைப் பாதுகாப்பு குறித்தும் பேசினாா்.
நிகழ்ச்சியில் கூடலூா் ஆய்வாளா் சாகுல் அமீது, அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேஸ்வரி மற்றும் காவல் துறை அலுவலா்கள், பள்ளித் தலைமை ஆசிரியா் அய்யப்பன் உள்பட ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...