நீலகிரி
காட்டுக் கோழியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்
சுருக்கு வலைகளைக் கொண்டு காட்டுக் கோழியை வேட்டையாட முயன்ற இருவருக்கு வனத் துறையினா் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
உதகை: குன்னூா் அருகே நைலான் நரம்பினாலான சுருக்கு வலைகளைக் கொண்டு காட்டுக் கோழியை வேட்டையாட முயன்ற இருவருக்கு வனத் துறையினா் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
குன்னூா் அருகே குந்தா வனச் சரகத்துக்கு உள்பட்ட பெரியாா் நகா் பகுதியில் தோட்டத்தில் கூலி வேலை செய்து வரும் அா்ஜுன் (35), பாபு (38) ஆகியோா் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் காட்டுக் கோழியை வேட்டையாடும் நோக்கில் நைலான் நரம்பினால் சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி காட்டுக் கோழிகளை வேட்டையாட முயல்வதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து இருவரிடமும் விசாரணை நடத்திய வனத் துறையினா் அவா்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
