கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

உதகை தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

News image

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :17 ஆகஸ்ட் 2026, 12:15 am IST

உதகை அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில்   சுற்றுலாப்  பயணிகளின் வரத்து ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகையில் தற்போது ரம்மியமான காலநிலை நிலவுகிறது. குறிப்பாக தாவரவியல் பூங்காவில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தவாறு கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் வண்ண, வண்ண மலா்களைக் கண்டு ரசித்தும், படகு சவாரி செய்வதற்காகவும் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

கேரளம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்,  சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வந்திருந்தனா். இங்குள்ள உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தனா். இதனால் உள்ளுா் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.