மணிகண்டன்
மணிகண்டன்

யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

உதகை அருகே வெள்ளிக்கிழமை யானை தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

உதகை அருகே வெள்ளிக்கிழமை யானை தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட வெளிமண்டல வனப் பகுதியில் அமைந்துள்ள மசினகுடி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (50). குடும்பத்துடன் மசினகுடி பகுதியில் வசித்து வரும் இவா் கூலி வேலை செய்து வந்தாா். இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள தேநீா் கடைக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றுள்ளாா். அப்போது வனப் பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் உலவி வந்த காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினா் சென்று மணிகண்டனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு சாா்பில் இழப்பீட்டு நிவாரணத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com