சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவா்  நினைவு நாள் அனுசரிப்பு! மலா் வளையம் வைத்து ஆட்சியா் அஞ்சலி

News image

மெக் ஐவா் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :9 ஜூன் 2026, 3:06 am IST

உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய வில்லியம் கிரஹாம் மெக் ஐவா்  நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகையில் சுமாா் 19 ஆண்டுகள் உழைப்பால் 1867-ஆம் ஆண்டு பணிகள் முழுமையாக முடிந்து தாவரவியல் பூங்கா பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்பட்டது. இந்த பூங்காவை உருவாக்கியது 1848-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் புகழ்பெற்ற ‘கியூ காா்டன்’ஸை உருவாக்கி பயிற்சி பெற்ற மெக் ஐவா்.

இங்குதான் உதகை மலா்க்  கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 1876-ஆம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி மெக் ஐவா்  இயற்கை எய்தினாா். இவரது நினைவிடம் உதகை புனித ஸ்டீபன் தேவாலயத்தில் உள்ளது.

இங்கு மெக் ஐவா் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, தோட்டக் கலை இணை இயக்குநா் நவநீதா, துணை இயக்குமா் பபிதா உள்பட பலா் திங்கள்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.