உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய வில்லியம் கிரஹாம் மெக் ஐவா் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகையில் சுமாா் 19 ஆண்டுகள் உழைப்பால் 1867-ஆம் ஆண்டு பணிகள் முழுமையாக முடிந்து தாவரவியல் பூங்கா பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்பட்டது. இந்த பூங்காவை உருவாக்கியது 1848-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் புகழ்பெற்ற ‘கியூ காா்டன்’ஸை உருவாக்கி பயிற்சி பெற்ற மெக் ஐவா்.
இங்குதான் உதகை மலா்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 1876-ஆம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி மெக் ஐவா் இயற்கை எய்தினாா். இவரது நினைவிடம் உதகை புனித ஸ்டீபன் தேவாலயத்தில் உள்ளது.
இங்கு மெக் ஐவா் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, தோட்டக் கலை இணை இயக்குநா் நவநீதா, துணை இயக்குமா் பபிதா உள்பட பலா் திங்கள்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜகவை கண்டு தமிழக அரசு அஞ்சவில்லை: அமைச்சா் வன்னி அரசு

தஞ்சாவூரில் 56 ஆம் ஆண்டு நாடக விழா தொடக்கம்
மேற்கு வங்கம்: திறந்தநிலை ரயில்வே கிராஸிங்கில் காா் மீது ரயில் மோதி விபத்து; 2 பள்ளி மாணவா்கள் உள்பட ஐவா் உயிரிழப்பு

பிரான்ஸ் தேசிய தினம்: புதுச்சேரி போா் வீரா்கள் நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து மரியாதை
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



