குன்னூா் அருகே ஜெ.கொலக்கம்பை பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் நான்கு புலிகள் உலவிய சம்பவம் எஸ்டேட் தொழிலாளா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் அண்மைக்காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், ஜெகதளா அருகே உள்ள ஜெ.கொலக்கம்பை பகுதியில் உள்ள தேயிலை ஸ்டேட் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு புலிகள் உலவிக் கொண்டிருந்தன. இதைக் கண்ட எஸ்டேட் பணியாளா்கள் அச்சமடைந்தனா்.
இது குறித்து தோட்டத் தொழிளாா்களுக்கு தகவல் தெரியவே, அவா்கள் அச்சமடைந்து வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தனா்.
இதற்கிடையே அந்த புலிகள் சிறிது நேரம் கழித்து தானாகவே அருகிலுள்ள வனப் பகுதிக்கு சென்றன.
இந்த புலிகள் தொட்டபெட்டா பகுதியில் உள்ள மலைச் சிகரத்தில் இருந்து வந்திருக்கக் கூடும் என்று தோட்டத் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அருவங்காடு ரயில் நிலையத்தில் உலவிய கரடி

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

தேயிலைத் தோட்டத்தில் மரத்தில் ஏறிய சிறுத்தை

குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


