நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பல்லடத்தில் வழிப்பறித் திருடன் கைது 

பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட  திருடன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On :30 ஜனவரி 2024, 9:53 pm IST

பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட  திருடன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
பல்லடம் அருகே கணபதிபாளையம் பேருந்து நிறுத்ததில் பல்லடம் காவல் துறை குற்றப் பிரிவு ஆய்வாளர் சரவணன், காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தவசியப்பன் உள்ளிட்டபோலீஸார் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்து கொண்டிருந்த, சந்தேகப்படும்படியான நபரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அந்த நபர் திருப்பூர் கணக்கம்பாளையம் வாஷிங்டன் நகர் கருப்பராயன் கோயில் வீதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (30) என்பதும், அருள்புரத்தில் சர்வீஸ் ஸ்டேஷ்ன் வைத்துள்ளதாகவும் தெரியவந்தது.  மேலும், இவர் தனது நண்பரான தாளக்கரை மல்லிகாபுரம் சாலை  பிச்சைமணி (40) என்பவருடன் சேர்ந்து தனியாக இருக்கும் பெண்களிடம் தாலிக்கொடி பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. 
இவர்கள் இருவரும், கடந்த 11.2.18ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகில் உள்ள செல்லம்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பூங்கோதை (60) தனது காரில் கோவை நோக்கி சென்றபோது பல்லடம் அருகே ஆறாக்குளம் பிரிவில்  கார் பழுதடைந்துவிட்டது. அப்போது, அங்கு காத்திருந்த பூங்கோதையிடம்இருந்து 11 பவுன் தாலிக்கொடியைப் பறித்துச் சென்றுள்ளனர். மேலும்,  பொல்லிக்காளிபாளையம், ஐஸ்வர்யா கார்டனில் வீட்டில் தனியாக இருந்த சாமியாத்தாவின் (61) 5 பவுன் தாலிக் கொடியையும், பல்லவராயம்பாளையத்தில் மளிகைக் கடை வியாபாரம் செய்து வரும் கண்ணம்மாளிடம் (59) 5 பவுன் தாலிக்கொடியையும் பறித்துச் சென்றுள்ளனர் எனத் தெரியவந்தது.
அதையடுத்து  சுந்தரபாண்டியை பல்லடம் போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 21 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய  பிச்சைமணியை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.