ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

"தமிழகம் ஆன்மிக பூமி என்பதைப் பறைசாற்றியது சோடஷ மகாலட்சுமி யாகம்'

இந்து முன்னணியின் சோடஷ மகாலட்சுமி யாகம் மகத்தான வெற்றி அடைந்ததாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவர்

Updated On :30 ஜனவரி 2024, 11:31 pm IST

இந்து முன்னணியின் சோடஷ மகாலட்சுமி யாகம் மகத்தான வெற்றி அடைந்ததாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்து முன்னணி சார்பில் பொங்கலூரில் கஜ பூஜை, 1008 கோமாதா பூஜை, 108 அஸ்வ பூஜையுடன் ஒரு லட்சம் குடும்பங்கள் பங்கேற்ற சோடஷ மகாலட்சுமி மகா யாகம் டிசம்பர் 23 முதல் 25 ஆம் தேதி வரையில் மூன்று நாள்கள் நடத்தப்பட்டது. 
இந்த நிகழ்வு மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதற்கு இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களின் கூட்டு முயற்சியே காரணமாகும். இந்து சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் தங்கள் குடும்ப விழாவாக எண்ணி இதில் கலந்து கொண்டனர். தமிழகம் ஆன்மிக பூமி என்பதைப் பறைசாற்றக் கூடிய வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. 
இவ்விழாவில் சமுதாயத்தின் முக்கியப் பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டது இந்து முன்னணி கட்சி சார்பற்ற இயக்கம் என்பதை உணர்த்தியுள்ளது. இதில், காவல் துறை, மருத்துவத் துறை, கால்நடைத் துறை, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகளும், பணியாளர்களும் மிகப் பெரிய ஒத்துழைப்பு வழங்கினர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.