அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உடுமலையில் ஆதரவற்றோர் இல்லம்: நகராட்சி திட்டம்

உடுமலை நகராட்சி சார்பில் ஆதரவற்றோர் இல்லம் கட்ட முடிவு செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளன. 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:12 am

DIN

உடுமலை நகராட்சி சார்பில் ஆதரவற்றோர் இல்லம் கட்ட முடிவு செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளன. 
உடுமலையில் முதியோர், மாற்றுத் திறனாளிகள்,  ஆதரவற்றோர்கள் பலர் சாலை யோரங்களில் ஆங்காங்கே வசித்து வருகின்றனர். இவர்களை பாதுகாப்பாக இரவு நேரங்களில் தங்க வைப்பதற்காக விடுதி ஒன்றை கட்டுவதற்கு உடுமலை நகராட்சி சார்பில் திட்டம் தீட்டப்பட்டது. 
இதற்கு கட்டடம் கட்டுவதற்காக தேசிய நகர்ப்புற  வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ரூ. 27 லட்சம் நிதி  பெற்றப்பட்டுள்ளது. 
உடுமலை,  சர்தார் வீதியில் நகராட்சிக்குச் சொந்தமான இடம் இதற்காகத் தேர்வு செய்யப் பட்டுள்ளது. 
சுமார் 10 சென்ட் இடத்தில் அமையவுள்ள இந்த விடுதியில் ஆண் கள்,  பெண்களுக்கு தனித் தனியாக தங்கும் அறைகள், கழிப்பிடம்,  குளியல் அறைகளுடன் கட்டப்பட உள்ளன. இந்த விடுதியில் 25 ஆதரவற்றோரை தங்க வைக்கலாம்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) க.சரவணகுமார் கூறியதாவது:
பகல் நேரங்களில் பல்வேறு பணிகளுக்குச் செல்லும் ஆதரவற்றோரும், முதியோரும் இரவு நேரங்களில் சாலையோரங்களில் பாதுகாப்பற்ற முறையில் உறங்குகின்றனர். இவர்களுக்காக ஒரு தங்கும் விடுதி கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் இந்த தங்கும் விடுதி அமைய உள்ளது. 
கட்டடம் கட்டுவதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. விரைவில் பணிகள் துவங்கும். இந்த விடுதியில் தங்குபவர்களைப் பராமரிக்கும் செலவுகளை ஏற்க உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம்  சம்மதம் தெரிவித்துள்ளது என்றார். 
நகராட்சிப் பொறியாளர் தங்கராஜ், நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ், தேஜஸ் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.எம்.நாகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.