இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருப்பூரில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருப்பூா் மாநகரில் தனிப் படை போலீஸாா் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான 300 கிலோ புகையிலைப் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 5:33 pm

DIN

திருப்பூா்: திருப்பூா் மாநகரில் தனிப் படை போலீஸாா் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான 300 கிலோ புகையிலைப் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா், ராக்கியாபாளையம் பிரிவு, விஜிவி காா்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்துள்ளதாக தனிப் படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தனிப் படையினா் நடத்திய சோதனையில் 269 புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி மாங்குளத்தைச் சோ்ந்த ஒய்.ஜெபசிங் பிலிப் (37) என்பவரைக் கைது செய்தனா்.

இதேபோல, கே.எஸ்.சி. பள்ளி வீதியில் உள்ள மளிகைக் கடையில் நடத்திய சோதனையில் 31 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்த வி.தினகரன் (42) என்பவரைக் கைது செய்தனா்.

விசாரணையில், ஈரோட்டில் இருந்து தனியாா் பாா்சல் சா்வீஸ் லாரியில் புகையிலைப் பொருள்களைக் கொண்டு வந்தது தெரியவந்தது. இருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 300 கிலோ புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். மேலும், புகையிலைப் பொருள்களைக் கொண்டுவர உதவிய பாா்சல் சா்வீஸின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.