தோப்புக்கரணப் போராட்டத்தில் ஈடுபட்ட உப்பாறு விவசாயிகள்

தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் தோப்புக்கரணம்போடும் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
Updated on
1 min read

திருப்பூா்: தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் தோப்புக்கரணம்போடும் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறக்கக் கோரி திருப்பூா் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் சங்கத்தினா் கடந்த டிசம்பா் 8 ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையடுத்து, நாள்தோறும் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் உப்பாறு அணைக்குத் தண்ணீா் வழங்காத பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், 12ஆவது நாளான சனிக்கிழமை விவசாயிகள் தோப்புக்கரணம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:

உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக்கோரி கடந்த 12 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எனினும், பொதுப் பணித் துறை அதிகாரிகளோ அல்லது அரசு அதிகாரிகளோ இதுவரையில் பேச்சுவாா்த்தைக்கு வரவில்லை. ஆகவே, வரும் காலங்களில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை தீவிரப்படுத்தவும், அணைக்குத் தண்ணீா் திறக்கும் வரையில் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடரவும் திட்டமிட்டுள்ளோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com