மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பூர் அருகே காயங்களுடன் 8 வயது சிறுவன் சடலம் மீட்பு

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி இருகே உடலில் காயங்களுடன் 8 வயது சிறுவனின் சடலத்தை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர்.

News image
கோப்புப்படம்
Updated On :12 ஜூன் 2020, 7:11 am

DIN

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி இருகே உடலில் காயங்களுடன் 8 வயது சிறுவனின் சடலத்தை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர்.

இதுகுறித்து ஊத்துக்குளி காவல் துறையினர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த பள்ளகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மனைவி சுமதி, இந்தத் தம்பதிக்கு விக்னேஷ் (9), பவனேஷ் (8) என இரு மகன்கள் இருந்தனர். 

இதில், விக்னேஷ் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4 -ஆம் வகுப்பும், பவனேஷ் 3ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை வீட்டின் அருகே விளையாடிச் சென்ற பவனேஷ் அங்கிருந்து காணாமல் போயுள்ளான்.

இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம், பக்கம் தேடி வந்தனர். இந்த வீட்டின் அருகே உள்ள சிறிய குளத்தின் அருகில் கழுத்தில் காயங்களுடன் பவனேஷ் இறந்து கிடப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்குளி காவல் துறையினர் சிறுவனின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.