மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பூரில் இளைஞர் குத்திக் கொலை: வடமாநில இளைஞர் கைது

திருப்பூரில் செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரைக் குத்திக் கொலை செய்த வடமாநில இளைஞரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 7:34 am

DIN

திருப்பூரில் செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரைக் குத்திக் கொலை செய்த வடமாநில இளைஞரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(33). இவர், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் திருப்பூர் மாநகரப் பகுதியில் கட்டிட வேலை, சமையல் வேலைக்குச் சென்று வந்துள்ளார். மேலும், இரவு நேரங்களில் சாலையோரங்களில் படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்ட சீனிவாசன் பல்வேறு குற்றச்சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். 
இவர் மீது திருப்பூர் மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ்குமார்(25) என்பவர் தனது உறவினரான 16 வயது சிறுவனுடன் திருப்பூர், தென்னம்பாளையம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். 
அப்போது அங்கு வந்த சீனிவாசன் கத்தியைக் காட்டி தினேஷ்குமாரின் செல்லிடப்பேசியை பறித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சீனிவாசனிடம் இருந்த கத்தியைப் பிடிங்கிய தினேஷ்குமார் அவரைக் குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த சீனிவாசன் சில நிமிடங்களில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் சீனிவாசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலையில் தலைமறைவாக இருந்த தினேஷ்குமாரை, காவல் துறையினர் திங்கள்கிழமை பிற்பகல் 12 மணி அளவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.