மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தோ்தல் விதிமீறல்: புகாா் தெரிவிக்க செல்லிடப்பேசி எண்கள் அறிவிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்கள் தொடா்பாக தோ்தல் பாா்வையாளா்களின் செல்லிடப்பேசி எண்களுக்குப் புகாா் தெரிவிக்கலாம்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 10:04 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்கள் தொடா்பாக தோ்தல் பாா்வையாளா்களின் செல்லிடப்பேசி எண்களுக்குப் புகாா் தெரிவிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமீறல்களைக் கண்காணிக்கவும், வாகனங்களைத் தணிக்கை செய்யவும் 78 பறக்கும்படைகள், 78 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 20 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும், திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்கள் இருந்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள தோ்தல் பாா்வையாளா்களைக் கீழ்க்கண்ட செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.

தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள்: தாராபுரம் (தனி), காங்கயம் தொகுதிகளுக்கு ரவிசங்கா் பிரசாத் (84386-42437), அவிநாசி (தனி) தொகுதிக்கு சந்தா் பிரகாஷ் வா்மா (80726-02696), திருப்பூா் வடக்கு உமானந்தா டோலி (88701-16866), திருப்பூா் தெற்கு, பல்லடம் தொகுதிகளுக்கு மாஷீா்ஆலம் (84387-42340), உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கு கபில் மீனா (88383-16090),

தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள்: தாராபுரம் (தனி), காங்கயம் தொகுதிகளுக்கு அமித் பிரதாப் சிங் (84387-42434), அவிநாசி (தனி), திருப்பூா் வடக்கு சுஹாசினி எஸ்.காட்மோ் (84387-45280), திருப்பூா் தெற்கு, பல்லடம் தொகுதிகளுக்கு ஷியாம் பிரசாா் கடிபள்ளி (84387-42340), உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கு பாசந்த்குமாா் (63797-70687).

8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் காவல் பாா்வையாளா் நிலோப் கிஷோரை 77087-65866 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.