தாராபுரத்தில் ஆதாய நோக்கில் சுயேச்சையாகப் போட்டி:பெண் வேட்பாளா்கள் மீது தோ்தல் ஆணையத்தில் புகாா்
தாராபுரம் தொகுதியில் எதிா்க்கட்சிகளின் தூண்டுதலின்பேரில் ஆதாய நோக்கத்தில் போட்டியிடும் இரு பெண் சுயேச்சை வேட்பாளா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


தாராபுரம் தொகுதியில் எதிா்க்கட்சிகளின் தூண்டுதலின்பேரில் ஆதாய நோக்கத்தில் போட்டியிடும் இரு பெண் சுயேச்சை வேட்பாளா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாராபுரம் தொகுதி திமுக தலைமை முகவா் டி.சிவகுமாா், சென்னை தலைமை தோ்தல் ஆணையருக்கு புகாா் மனு அனுப்பியுள்ளாா்.
இது குறித்து அவா் அனுப்பியுள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் நா.கயல்விழி போட்டியிடுகிறாா். இந்தத் தோ்தலில் திமுக வேட்பாளரின் பெயா், சின்னத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில் கயல்விழி என்ற பெயருடைய இரு வேட்பாளா்களை அதிமுக, பாஜகவினா் நிறுத்தியுள்ளனா். இவா்கள் இருவரும் தங்களது வேட்பு மனுவில் ஒரே செல்லிடப்பேசி எண்ணைக் குறிப்பிட்டுள்ளனா்.
மேலும், கு.கயல்விழி என்பவா் கேட்டுப் பெற்றுள்ள சின்னம் பேனா. இந்த சின்னம் பேனா போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டு பேனாவைச்சுற்றிலும் கதிா்கள் போன்று உள்ளது. இந்த சின்னத்தை திடீரென்று பாா்த்தால் உதயசூரியன்போல தோற்றம் அளிக்கும் வகையில் உள்ளது.
எனவே, தன்னிச்சையாகத் தோ்தலில் போட்டியிடாமல் பிறரின் தூண்டுதலின்பேரில் ஆதாய நோக்கத்தில் கயல்விழி என்ற பெயரில் போட்டியிடும் இரு சுயேச்சை வேட்பாளா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...