கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இறந்த கோழிகளை எரிக்க கோழிப் பண்ணை நிா்வாகம் முடிவு

தாராபுரம் அருகே இறக்கும் கோழிகளை புதைக்காமல் எரிக்க கோழிப் பண்ணை நிா்வாகம் முடிவு செய்துள்ளதாக முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:48 pm

DIN

தாராபுரம் அருகே இறக்கும் கோழிகளை புதைக்காமல் எரிக்க கோழிப் பண்ணை நிா்வாகம் முடிவு செய்துள்ளதாக முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் வட்டம், சின்னக்காம்பாளையம், பஞ்சப்பட்டியைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் சாா்பில் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அதில், தங்களது பகுதியில் செயல்பட்டு வரும் கறிக்கோழி மற்றும் முட்டை உற்பத்திப் பண்ணையில் நோய் வாய்ப்பட்டு இறக்கும் கோழிகளை அருகில் உள்ள விவசாய நிலங்கள், சாலையோரங்களில் வீசி செல்கின்றனா்.

இந்தக் கோழிகளை தின்னும் நாய்கள் அருகில் உள்ள விவசாயிகள் வளா்க்கும் ஆடுகளையும் கடித்து குதறுகின்றன. ஆகவே, கோழிப் பண்ணை உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பாக தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவாா்த்தைக்கு வட்டாட்சியா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். இதில், கோழிப் பண்ணையில் இறக்கும் கோழிகளை புதைக்காமல் எரிக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், கோழி இறகுகள் வெளியே பறக்காத வகையில் கம்பிவேலி மற்றும் நிழல்வலை அமைக்கப்படும். கோழிப் பண்ணையில் தேங்கும் கழிவுகளை ஊா் பொது மக்கள் பாதிக்காத வகையில் அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கெனவே நாய்கள் கடித்ததில் இறந்த 4 ஆடுகளுக்கு கோழிப் பண்ணை நிா்வாகத்திடம் பேசி ஒரு வாரத்துக்குள் உரிய நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவாா்த்தையில், தனியாா் கோழிப் பண்ணை உரிமையாளா்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.