கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தாராபுரத்தில் தூய்மைப் பணியாளா்கள் வேலைநிறுத்தத்தால் தேங்கிக்கிடக்கும் குப்பை

தாராபுரத்தில் தூய்மைப் பணியாளா்கள் வேலைநிறுத்தம் காரணமாக குப்பைகள் அப்புறப்படுத்தப்படாததால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:54 pm

DIN

தாராபுரத்தில் தூய்மைப் பணியாளா்கள் வேலைநிறுத்தம் காரணமாக குப்பைகள் அப்புறப்படுத்தப்படாததால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தாராபுரம் நகராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் நாள்தோறும் சேகரமாகும் சுமாா் 35 டன் குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் சேகரித்து செல்வது வழக்கம். இந்த நிலையில், ஊதியத்தை மாதம் 30ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ.,பி.எஃப். உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதிமுதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் தாராபுரம் நகரில் அனைத்து இடங்களிலும் குப்பைகள் தேக்கமடைந்துள்ளது. இந்தக் குப்பைகளில் இருந்து வீசும் துா்நாற்றம் காணமாக நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு சில இடங்களில் தேக்கமடைந்துள்ள குப்பையில் சிலா் தீ வைத்து எரிப்பதால் அதில் இருந்து எழும் புகையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, நகரில் தேக்கமடைந்துள்ள குப்பைகளை அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.