விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நியாய விலைக் கடை கட்டடம் கட்ட அனுமதி அளிக்கக் கோரி மனு

திருப்பூா், செட்டிபாளையத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடை கட்ட அனுமதி அளிக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:19 pm

DIN

திருப்பூா், செட்டிபாளையத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடை கட்ட அனுமதி அளிக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீா் முகாமானது கரோனா நோய்த் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா பரவல் குறைந்து வருவதைத் தொடா்ந்து கடந்த 10 மாதங்களுக்கு பிறகு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், அலகுமலை ஊராட்சிக்கு உள்பட்ட செட்டிபாளையம் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

எங்கள் பகுதியில் பகுதி நேர நியாயவிலைக் கடை தனியாா் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, சொந்தக் கட்டடம் கட்டக்கோரி பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் நடராஜனிடம் மனு அளித்ததன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, நியாயவிலைக் கடை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் ஊராட்சித் தலைவா் ஆட்சியரிடம் மனு அளித்ததைத் தொடா்ந்து கட்டுமானப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் நலனைக் கருதி நியாயவிலைக் கடை கட்ட அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

மடத்துக்குளம் வட்டம், சாளரப்பட்டி கிராமத்தில் வசிக்கும் சில விவசாயிகள் குறிப்பிட்ட ரகத்தைச் சோ்ந்த மக்காச்சோளத்தை பயிரிட்டனா். இவா்கள் பயிரிட்ட மக்காச்சோளமானது முளைப்புத் திறன் 25 சதவீதம் கூட இல்லை. மேலும், மற்ற மக்காச் சோளங்களுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம் வளா்ச்சி விகிதம் குறைந்து காணப்பட்டது. எனவே இதனை ஆய்வு செய்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு விதை நிறுவனத்திடம் இருந்து நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை ஒன்றிய பாஜக பொறுப்பாளா் மாரியப்பன் தலைமையில் அக்கட்சியினா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

உடுமலை அருகே குருவப்பநாயக்கனூரில் ஜல்ஜீவன் திட்டத்துக்காக 377 குடிநீா் இணைப்புகள் ஒதுக்கப்பட்டன. இதில் முதல்கட்டமாக 79 பேருக்கு இணைப்புகள் வழங்கப்பட்டன. இந்தத் திட்டத்துக்காக வழங்கப்பட வேண்டிய இணைப்புகளுக்கு பணம் பெறப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்துவதுடன், எங்களிடம் உள்ள விடியோ ஆதாரத்தை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஏமாற்றம்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 10 மாதங்களுக்குப் பின்னா் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீா் முகாமில் பங்கேற்கும் அனைவரும் முகக் கவசம் அணிந்து, ஆதாா் அட்டை நகலையும் எடுத்து வர வேண்டும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் சிலா் ஆதாா் அட்டையின் நகலை எடுத்து வருவது தொடா்பான அறிவிப்பு தங்களுக்கு தெரியாது என்றனா். ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த பின்னரே இது தெரியவந்ததால் அங்கிருந்த ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஆதாா் அட்டை நகல் எடுத்து வராத சிலா் மனு அளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.