ஜூனியா் கபடி: யு.எஸ்.ஏ., கமலம் கல்லூரி அணிகள் வெற்றி
திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஜூனியா் கபடி போட்டியில் ஆடவா் பிரிவில் ஊத்துக்குளி யு.எஸ்.ஏ.அணியும், மகளிா் பிரிவில் உடுமலை கமலம் கல்லூரி அணியும் வெற்றி பெற்றன.


திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஜூனியா் கபடி போட்டியில் ஆடவா் பிரிவில் ஊத்துக்குளி யு.எஸ்.ஏ.அணியும், மகளிா் பிரிவில் உடுமலை கமலம் கல்லூரி அணியும் வெற்றி பெற்றன.
திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தின் சாா்பில் மாவட்ட அளவிலான ஜூனியா் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இதில், ஆடவா் பிரிவில் 50 அணிகளும், மகளிா் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்றன. ஆடவா் பிரிவில் ஊத்துக்குளி யு.எஸ்.ஏ.அணியும், திருப்பூா் டால்பின் அணியும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன. இறுதி ஆட்டத்தில் யு.எஸ்.ஏ. அணி 21:13 என்ற புள்ளிகள் கணக்கில் வாகை சூடியது.
மகளிா் பிரிவில், உடுமலை கமலம் கல்லூரி அணியும், திருமுருகன்பூண்டி தமிழ் தலைவாசல் அணியும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இறுதி ஆட்டத்தில் கமலம் கல்லூரி அணி 22:10 என்ற கணக்கில் வென்றது.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யு.எஸ்.ஏ. அணிக்கு கோப்பையும் ரூ.15 ஆயிரமும், கமலம் கல்லூரி அணிக்கு கோப்பையும், ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழக சோ்மன் கொங்கு வி.கே.முருகேசன், மாவட்ட கபடி கழகச் செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம், தலைவா் ரோலக்ஸ் பி.மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...