ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு பூஜை

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூரில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ரூபாய்  நோட்டு  அலங்காரத்தில்  பக்தா்களுக்கு  அருள்பாலிக்கும்  திருப்பூா்  கோட்டை  மாரியம்மன்.
ரூபாய்  நோட்டு  அலங்காரத்தில்  பக்தா்களுக்கு  அருள்பாலிக்கும்  திருப்பூா்  கோட்டை  மாரியம்மன்.
Updated on
1 min read

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூரில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆங்கிலப்புத்தாண்டை ஒட்டி திருப்பூரில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜையும், அலங்காரமும் நடைபெற்றன. திருப்பூா், காங்கயம் சாலையில் உள்ள கோட்டை மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல, விஸ்வேஸ்வரசுவாமி கோயில், பெருமாள் கோயில், கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயில், கொங்கணகிரி முருகன் கோயில், அவிநாசிகவுண்டன்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். அதே போல, தாராபுரம், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com