பொதுக்குழு முடிவில் கூட்டணி குறித்து தெரியவரும்: தேமுதிக

தேமுதிக பொதுக்குழு முடிவில் கூட்டணி குறித்து தெரியவரும் என்று அதன் துணைச் செயலாளர் ப.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். 
தேமுதிக துணைச் செயலாளர் ப.பார்த்தசாரதி.
தேமுதிக துணைச் செயலாளர் ப.பார்த்தசாரதி.
Updated on
1 min read

தேமுதிக பொதுக்குழு முடிவில் கூட்டணி குறித்து தெரியவரும் என்று அதன் துணைச் செயலாளர் ப.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். 
திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற தேதிமுக துணைச்செயலாளர் ப.பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேதிமுகவை 7 மண்டலமாகப் பிரித்து தலைமைக்கழக நிர்வாகிகளை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் நியமித்துள்ளார். 
கோவை மண்டலத்துக்கு என்னையும், தேர்தல் பணி செயலாளர் சந்துருவையும் நியமனம் செய்துள்ளார். இதனடிப்படையில், திருப்பூரில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட, சட்டன்ற தொகுதி பொறுப்பாளர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், பூத் கமிட்டி அமைப்பது, வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. 
அதிமுக கூட்டணியில்தான் அங்கம் வகித்து வருவதாக கட்சியின் பொருளாளர் பிரேமலதா பல செய்திகளில் சொல்லியுள்ளார். அதே போலத்தான் வரும் பொதுக்குழு முடிவில் நாங்கள் கூட்டணியா, கூட்டணியில் இல்லையா என்பது தெரிவரும். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு இவ்வளவு தொகுதி வேண்டும் என்று வெளிப்படையாக தெரிவித்து வருவது தொடர்பான கேள்விக்கு நாங்களும் மறைமுகமாக எத்தனை தொகுதி வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். 
திருப்பூரை அடுத்த அருள்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை தேமுதிக பொருளாளர் பிரேமலதா, விஜயபிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் தேமுதிகவில் இணையவுள்ளனர் என்றார். இந்த சந்திப்பின்போது, தேமுதிக தேர்தல் பணிக்குழு செயலாளர் கே.சந்துரு, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் முத்துவெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com