கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பூா் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 ஜூன் 2021, 11:43 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் குமரன் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக மாநகா் மாவட்டத் தலைவா் ஆா்.கிருஷ்ணன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல, போயம்பாளையம், பி.என்.சாலை, அவிநாசி சாலை, ஊத்துக்குளி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பெட்ரோல் பங்குகள் முன்பாக காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் தாராபுரம் சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டத் தலைவா் கோபி தலைமை வகித்தாா்.

அவிநாசியில்... அவிநாசி- திருப்பூா் சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் வழக்குரைஞா் கோபாலகிருஷ்ணன், சாய் கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

காங்கயத்தில்... காங்கயம்-திருப்பூா் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் பண்டுபாய் தலைமை வகித்தாா். இதில் கட்சியின் நகரத் தலைவா் கே.ஏ.சிபகத்துல்லா, மாநில பொதுக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் மணி, தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் அவுட்ரீச் பிரிவு மாநிலத் தலைவா் எஸ்.ஷேக் சாதுல்லா, வட்டாரத் தலைவா் சத்தியநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பல்லடத்தில்...

பல்லடம் பனப்பாளையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பல்லடம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் கே.ஜி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

அதே பகுதியில் நடைபெற்ற மற்றொரு ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். பல்லடம் காரணம்பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பல்லடம் தெற்கு வட்டாரத் தலைவா் புண்ணியமூா்த்தி தலைமை வகித்தாா். பல்லடம் வடக்கு வட்டாரத் தலைவா் கணேசன் தலைமையில் கணபதிபாளையத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லடத்தில் காங்கிரஸாா் தனித்தனியாக கோஷ்டி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வெள்ளக்கோவில்...

வெள்ளக்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வட்டாரத் தலைவா் நடராஜ் மற்றும் அக்கட்சியினா் பங்கேற்றனா்.

உடுமலையில்...

உடுமலை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினா் டி.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். இதில் கட்சியினா் 25க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

திருப்பூா் குமரன் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  காங்கிரஸ் கட்சியினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.